Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த பொருட்களை கொண்டு வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

Advertiesment
மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த பொருட்களை கொண்டு வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:58 IST)
மகாலட்சுமிக்கு பிடித்தமான பொருட்களை வைத்து பூஜை செய்வதன் மூலம், அந்த மகாலட்சுமி தேவியை நம் வீட்டிலேயே நிரந்தரமாக அமர வைத்துக் கொள்ள முடியும்.


அந்த வரிசையில் மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக்கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம்.

வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது. மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களின் வரிசையில் செம்பருத்தி பூ விற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றும், புதன்கிழமை அன்றும் சிவப்பு நிறத்தில் ஒற்றை அடுக்கில் ஐந்து இதழ்களைக் கொண்ட செம்பருத்திப்பூவை மகாலட்சுமிக்கு சூட்டி வழிபாடு செய்து வருவதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருளில் ஏலக்காயும் அடங்கும் இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் இந்த ஏலக்காயை எந்த பொருளோடு சேர்த்து வெள்ளிக்கிழமை பூஜையில் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? வாசனை திரவியங்களில் பட்டியலில் பன்னீருக்கு எப்போதுமே முதலிடம். பெரிய பெரிய பூஜைகள் ஹோமங்கள் இதில் வைக்கும் கலச சொம்பில் கட்டாயமாக இந்த பன்னீரும் சேர்ந்திருக்கும். ஏனென்றால் கடவுளை வசியப்படுத்த கூடிய தன்மை இந்த பன்னீருக்கு அதிகமாகவே உள்ளது.

ஏலக்காயை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய எச்சில் படாத டம்ளரில் கொஞ்சமாக பன்னீரை ஊற்றி, அதில் ஏலக்காய் பொடியை போட்டு வெள்ளிக்கிழமை பூஜையில் வைத்து பூஜை செய்து, வீட்டில் தெளிக்கலாம்.

மகாலட்சுமிக்கு விருப்பமான பல பொருள்கள் இருந்தாலும் நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருள்களின் பட்டியலில் செம்பருத்திப் பூ, ஏலக்காய், பன்னீர் இந்த மூன்று பொருட்களும் அடங்கும்.

முடிந்தவரை வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது மகாலட்சுமிக்கு வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வாசனை மிகுந்த தூபங்கள் போடுவதோடு, மகாலட்சுமிக்கு பச்சைக் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வதும் சிறப்பானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!