Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகப்பெருமானுக்கு சஷ்டியில் விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள் !!

Advertiesment
முருகப்பெருமானுக்கு சஷ்டியில் விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள் !!
இந்த சஷ்டி விரதம் வீட்டில் அல்லது கோயிலில் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

இந்த விரதம் இருப்பதன் மூலம் முதல் சிறப்பு பலன் குழந்தை பேறு. அதோடு நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நன்மை சேரவும், நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேர உதவும்.
 
வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று  வரலாம்.
 
வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.
 
செவ்வரளி மாலை சார்த்தி முருகனை தரிசித்தால் நம்மிடம் உள்ள பல தோஷங்கள் நீங்கும். மேலும் இந்த சஷ்டி நாளில் பெரும்பாலும் கல்யாணம் ஆன பெண்கள்  தங்களுக்கு முருகனைப் போன்ற ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்து வழிபடுவார்கள்.
 
முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாவார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த சஷ்டி நாளன்று முருகனை வணங்குவது மிகவும் நல்லது. மேலும்,  இந்த நாளில் விரதம் இருந்தால் நம் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
 
ஆண், பெண்ணுக்கு உள்ள திருமண தடைகள் நீங்கி மிக விரைவில் திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியம் அமையும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-01-2021)!