Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : கன்னி

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : கன்னி
, வெள்ளி, 29 ஜூலை 2016 (17:46 IST)
நெருக்கடி நேரத்திலும் சிரிப்பவர்களே! உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் இந்த மாதம் முழுக்க பயணிப்பதால் உங்களுடைய தனித்திறமை அதிகரிக்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களெல்லாம் மீண்டும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் புகழும்படி நடந்துக் கொள்வீர்கள்.
 
3-ல் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கூடி வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமாநிலத்தில் இருப்பவர்களால் சில உதவிகள் கிடைக்கும். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 16-ஆம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். ஷேர் மூலமாக பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும்.
 
2-ஆம் தேதி முதல் குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வீண் சந்தேகம் ஈகோப் பிரச்னையால், கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும். பெரிய நோய் இருக்குமோ என்றெல்லாம் அஞ்ச வேண்டாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள்.
 
வெளி உணவுகள் மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன், வயிற்று உபாதைகள் வந்துப் போகும். பழைய பிரச்னைகள் போல் மீண்டும் ஏதேனும் சிக்கல்கள் வந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது தூக்கமில்லாமல் தவிப்பீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 3-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வேலைக் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
 
கன்னிப் பெண்களே! ஜென்ம குரு தொடங்குவதால் மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள், தோலில் தடிப்பு வரக்கூடும். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! பிறமொழிப் படங்களால் புகழடைவீர்கள். பணவரவு ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : சிம்மம்