Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : சிம்மம்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : சிம்மம்
, வெள்ளி, 29 ஜூலை 2016 (17:41 IST)
நீதி நெறி தவறாதவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் பகவான் கேந்திரத்தில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீட்டை மாற்றுவது, விரிவுப்படுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும்.
 
உங்கள் ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு ஆரோக்ய குறைவையும், பிரச்னைகளையும், பணப்பற்றாக்குறையையும், வீண் பகைமையையும் தந்துக் கொண்டிருக்கும் குருபகவான் 2-ஆம் தேதி முதல் தன ஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால் ஆரோக்யம் சீராகும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை விலகும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். இழந்த சொத்தை மீண்டும் பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
 
16-ஆம் தேதி வரை உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்து காணப்படுவதால் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 17-ஆம் தேதி முதல் சூரியன் உங்கள் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் அழகு, இளமைக் கூடும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
 
வீடு, மனை விற்பது லாபகரமாக முடியும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். விலை உயர்ந்த வெள்ளி, தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ஜென்ம ராசியிலேயே ராகு தொடர்வதால் தலை வலி, அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளை யாரும் கேட்டு நடந்துக் கொள்வதில்லை, மதிப்பதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் வருத்தப்படுவீர்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பங்குதாரர்களால் பலனடைவீர்கள். வேலையாட்களும் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். அதிகாரிகள் உங்களுடைய கடின உழைப்பைப் புரிந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். இழுபறி நிலை மாறி ஏற்றம் தரும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : கடகம்