எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன.
எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழை இல்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.
வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளலாம்.
ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.
புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் போன்றவற்றில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் இந்த வெள்ளெருக்கு விநாயரை வைத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.