Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுக்கும் யோகம் தரும் நாட்கள் எவை?

ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுக்கும் யோகம் தரும் நாட்கள் எவை?
பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர்  பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே.

 
தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில  நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
 
அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை  ஆரம்பிக்கக் கூடாது.
 
யோகங்கள்: 
 
பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள்  நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.
 
அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை  கொடுக்கக்கூடியவையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரு அருட்பிரகாச வள்ளலாரின் அருளுரைகள்