Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திகை மாதத்தில் விளக்கு ஏற்றுவதால் இத்தனை நன்மைகள் உண்டா...?

கார்த்திகை மாதத்தில் விளக்கு ஏற்றுவதால் இத்தனை நன்மைகள் உண்டா...?
கார்த்திகை மாதம் முழுவதும் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம். கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.
 
* கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
* கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம்,  தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
 
* கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில்  நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.
 
* கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
 
* கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும். கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்தை அலறினால் அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமா என்ன...?