Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்க எளிய வழி !!

Advertiesment
குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்க எளிய வழி !!
குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை  செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி - இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு  வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
 
மந்திரம்:
 
ஓம் பவாய நம ஓம் சர்வாய நம 
ஓம் ருத்ராய நம ஓம் பசுபதே நம 
ஓம் உக்ராய நம ஓம் மஹாதேவாய நம 
ஓம் பீமாய நம ஓம் ஈசாய நம
 
தினமும் 108 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
 
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற  தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம்  செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனி பிரதோஷத்தின் சிறப்புகளும் வழிபாடுகளும் !!