அருள் தரும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
ராசி ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
21.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.09.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்கள் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
அஸ்தம்:
இந்த மாதம் இளைய சகோதரர், சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சனேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப் 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 26, 27