அருள் தரும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
21.08.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.09.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று ராசியில் இருந்து சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.
மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.
புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர்.
பூசம்:
இந்த மாதம் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
ஆயில்யம்:
இந்த மாதம் சகோதர சகோதரிகளிடம் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நிலம், வீடு, வாகனம், ஆடை போன்றவைகள் புதிதாக வாங்கலாம். தாய், தாய் வழி உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளை கவனமுடன் கண்கானிக்க வேண்டி வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: செப் 07, 08
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 21, 22