Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீஜகந்நாதரின் ரத யாத்திரை

Advertiesment
ஸ்ரீஜகந்நாதரின் ரத யாத்திரை
, ஞாயிறு, 20 ஜூலை 2008 (15:17 IST)
இந்த வார புனிதப் பயணத்தில், குஜராத்தில் உள்ள ஜகந்நாதர் கோயிலில் நடைபெறும் ரத யாத்திரைக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

webdunia photoWD
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் திவிதியை நாளில் இந்த ரத யாத்திரை துவங்கி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீஜகந்நாதர் கோயிலில் இருந்து அன்றைய தினம் 3 ரதங்கள் புறப்படும். முதல் ரதத்தில் ஸ்ரீஜகந்நாதர் எழுந்தருளுவார். இரண்டாவதாக இருக்கும் ரதத்தில் அவரது சகோதரி சுபத்ராவும், மூன்றாவது ரதத்தில் சகோதரன் பலராமனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றனர்.

இந்த விழாவில் நூற்றுக்கணக்கான துறவிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு, அப்பகுதியையே பக்தியால் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

தேர் புறப்பட்டு முதலில் அகாதாஸ் என்ற இடத்திற்குச் செல்கிறது. அகாதாஸ் என்பது கலாச்சார உடற்பயிற்சிக் கூடமாகும். அப்பகுதிக்கு ஜகந்நாதரின் தேர் வந்ததும், உடற்பயிற்சி வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்து காண்பிப்பார்கள்.

webdunia
webdunia photoWD
விழாவின்போது அந்நகரமே திருவிழாக் கோலம் மூண்டிருக்கும். மூலை முடுக்குகளில் எல்லாம் ஸ்ரீ ஜகந்நாதரின் அருளையே பாடிக் கொண்டிருக்கும்.

சாலையில் ஜகந்நாதரின் தேர் வலம் வரும்போது, அப்பகுதியில் இருப்பவர்கள் மலர் தூவி ஜகந்நாதரை வரவேற்கின்றனர்.

பாரம்பரிய வழக்கப்படி, கஜராஜா எனப்படும் யானை ஜகந்நாதரின் கோயிலுக்குச் சென்று பார்த்துவிட்டு வரும், அதன் பின்னர் அம்மாநிலத்தின் உயர் அதிகாரி (தற்போது முதலமைச்சர்) பொன் துடப்பத்தால் தேர் புறப்படும் இடத்தை தூய்மைப்படுத்துகிறார். அதன் பின்னரே நகரை வலம் வர ரதம் புறப்படுகிறது.

webdunia
webdunia photoWD
அதிகாலையிலேயே கோயிலில் இருந்து புறப்படும் இந்த ரதம், சரஸ்புர் என்ற பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் ரதத்துடன் வந்தவர்களுக்கும், பக்தர்களுக்கும் உணவுகள் வழங்கப்படுகின்றன. சுமார் 1 லட்சம் பேருக்கு உணவளிக்கப்படுகிறது.

கோயில் வரலாறு : இந்த ஸ்ரீஜகந்நாதரின் கோயில் சுமார் 443 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோயிலின் மூல தெய்வம் ஸ்ரீ ஜகந்நாதர்.

இந்த ரத யாத்திரைக்கு ஒரு வரலாற்றுக் கதை உள்ளது. அதன்படி சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஜகந்நாதர் கோயிலின் பூசாரி நரசிங்க ஜியின் கனவில் வந்த இறைவன், தன்னை ரத யாத்திரை விழா எடுத்து சிறப்பிக்குமாறுக் கூறியுள்ளார்.

அந்த பூசாரியும் அவ்வாறே செய்துள்ளார். அன்றைய தினத்தில் இருந்து ஆண்டுதோறும் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

webdunia
webdunia photoWD
இந்த கோயிலுக்கு வந்து ஸ்ரீஜகந்நாதரை தரிசித்தால் அவரது அருள் கிட்டும் என்றும், இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தால் சகல செல்வங்களும், மகிழ்ச்சியும் வாழ்வில் கிட்டும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

முந்தைய காலத்தில் தேரோட்டி மட்டுமே தேரை ஓட்டி வந்தார். தற்போது பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க ஆர்வம் கொண்டுள்ளதால் தற்போது தேர் வடம் பிடித்து இழுக்கும் வகையில் தேர் வடிவமைக்கப்படுகிறது.

எப்படிச் செல்வது : இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் அஹமதாபாத், ரயில் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil