கோகாஜி பிறந்த இடத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் ஹனுமங்காடி மாவட்டத்தில் உள்ள கோகமாடி தாமின் என்ற இடத்தில்தான் கோகாஜியின் சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் இரண்டு பூசாரிகள் உள்ளனர். ஒருவர் இந்துவாகவும், மற்றொருவர் இஸ்லாமியராகவும் இருக்கிறார். மத ஒற்றுமையை பறைசாற்றுவதாக இது அமைந்துள்ளது. ஆவணி மாத பெளர்ணமி திணத்தில் இருந்து புரட்டாசி மாதம் பெளர்ணமி நாள் வரை இங்கு திருவிழா நடத்தப்படுகிறது.இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கோகா தேவின் ஆசியைப் பெறுகின்றனர். அப்போது இந்த கோயிலே வண்ண மயமாகக் காட்சி அளிக்கிறது.
கோகா தேவின் கோயிலுக்கு வரும் எவரும், அவரது குண நலன்களையும், பண்புகளையும் தெரிந்து கொண்ட பின்னர், கோகாதேவின் பக்தர்கள் ஆகிவிடுவார்கள். கோகா தேவின் கடமையுணர்ச்சியும், ஒழுக்கமும் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் உள்ளது.
இந்த வார புனிதப் பயணம் உங்களுக்கு எப்படி அமைந்தது என்று எங்களுக்கு எழுதுங்கள்.
எப்படிச் செல்வது
விமான மார்கம் : ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 250 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
ரயில் மார்கம் : சதால்புர் ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
சாலை மார்கம் : சதால்புர் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது. பேருந்துகளும், டாக்சிகளும் கிடைக்கின்றன.