கற்பக்கிரகத்தில் உள்ள சிவலிங்கம் இறைத்தன்மையுன் காட்சயளிக்கிறது. கற்பக்கிரகம் முழுவதும் வெள்ளியால் வேயப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை தொட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தண்ணீர் மற்றும் பால் அபிஷேகத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த கோயிலில அனுமனுக்கும், சோம்நாத் மஹாதேவ்கும் தனியான சந்நிதிகள் உள்ளன. சுவாமி சிதானந்த் சரஸ்வதியின் பாதச் சுவடுகளைக் கொண்ட தனி சந்நிதியும் உண்டு.
ஆவணி மாதத்தில் வரும் திரயோதசி நாளில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் இங்கு வரும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் கோயில் அறக்கட்டளை மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.
எப்படிச் செல்வது
சாலை மார்கம் - காந்திநகரில் இருந்து 115 கி.மீ. தொலைவில் வதோத்ரா உள்ளது. அஹமதாபாத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளது.
ரயில் மார்கம் - டெல்லி - மும்பை முக்கிய ரயில் மார்கத்தில் வதோத்ரா ரயில் நிலையம் உள்ளது. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து நேரடியாக வதோத்ராவிற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விமான மார்கம் - அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 111 கி.மீ. தொலைவில் வதோத்ரா உள்ளது.