கடந்த 1959- 95ஆம் ஆண்டுகளில், மன்னர் துலிசிங் வழங்கிய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதியைக் கொண்டு இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. கோயில் அருகே குளமும் கட்டப்பட்டது. மன்னர் ஜஸ்வந்த் சிங் காலத்தில் ஆலய அர்ச்சகர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. 1991- 92ஆம் ஆண்டில் ரத்லாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சம் செலவில் ஆலயத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்தன.இக்கோயிலைப் பற்றி அர்ச்சகர் அவந்திலால் திரிவேதி கூறுகையில், "மன்னர் சைலானா காலத்தில் இருந்து இவ்வாலயம் இங்குள்ளது.
எங்களின் நான்காவது தலைமுறையினர் இறைவனுக்கு தொண்டு புரிந்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ராவண மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சிவனை தரிசிக்கின்றனர்" என்றார்.
ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி, வைசாக பூர்ணிமா மற்றும் கார்த்திக பூர்ணிமாவின் போது நடைபெறும் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவனருள் பெறுகின்றனர்.
எப்படிச் செல்வது?
சாலை மார்க்கம் : ரட்லம் நகரில் இருந்து டாக்சி, பேருந்துகள் அடிக்கடி உள்ளன.
ரயில் மார்க்கம் : டெல்லி - மும்பை வழித் தடத்தில் ரடலம் ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலைச் சென்றடையலாம்.
விமானம் மூலம் : இந்தூரில் உள்ள தேவி அகிலாபாய் ஹோல்கர் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலை சாலை மார்க்கமாகச் சென்றடையலாம்.