ஜைன மதத்தில் இருபெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று ஸ்க்வேதாம்பர மரபு மற்றொன்று திகம்பர மரபு. ஷ்வேதாம்பர மரபில் பர்யூஷன் திருவிழா 8 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. திகம்பர மரபில் பர்யூஷன் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. திகம்பர மரபை பின்பற்றுவோர் கொண்டாடும் பர்யூஷன் விழாவிற்கு 'துஸ்லக்ஷணம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு.தீபாவளி, ஈத், கிறிஸ்துமஸ் போல் ஒளியும், பகட்டும் நிரம்பியது போல் பர்யூஷன் கொண்டாடப்படுவதில்லை என்றாலும், ஜைன சமூகத்தில் இதற்கென்று ஒரு தனியான இடம் உள்ளது, இது அவர்கள் சமூகத்தில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் ஒரு திருவிழாவா என்பதில் ஐயமில்லை. இந்த மகிழ்ச்சியான சமயத் திருவிழாவின் காட்சிகளை இந்த ஆண்டில் இண்டோரில் உள்ள அனைத்து திகம்பர ஜைன கோயில்களிலும் நாம் காணலாம்.மகாவீரரின் அருளாசியை பெற ஆயிரக்கணக்கான ஜைன சமூகத்தினர் இந்தக் கோயில்களில் அலை மோதுவர். இந்த விழாக்காலத்தில் கோயில்கள் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அந்த அலங்காரத்தின் அழகில் மயங்காமல் ஒருவரும் அந்த இடத்தை கடந்து செல்லமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.பர்யூஷன் திருவிழாவின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் பல்வேறு வழிமுறைகளில் ஆன்ம சுத்தி பெறுவது. சுற்றுச்சூழலின் தூய்மை அதில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பர்யூஷன் திருவிழாக்கால வழிபாடுகள், வேண்டுதல்கள், சடங்குகளில் அகிம்சையும், உண்ணா நோன்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இவை ஜைன சமயத்தின் பிராதன அங்கம் என்றால் அது மிகையாகாது. இந்த காலத்தில்தான் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தினசரி வாழ்விலிருந்து விடுபடுகின்றனர். இதற்குக் காரணம் வாழ்க்கையில் பொறுமையையும், பக்தியையும் வலியுறுத்துவதே இந்த விழாவின் நோக்கம்.
பர்யூஷன் பருவம் முடிந்த பிறகு க்ஷாமவாணி பருவம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள், முந்தைய ஆண்டு அவர்கள் அடுத்தவர்களுக்கு அறிந்தோ, அறியாமலோ இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார்கள். இதில் மன்னிப்பு வழங்குபவரின் இடம், மன்னிப்பு கோருவோரின் இடத்தைக் காட்டிலும் எப்போதும் உயர்ந்தது என்று கருதப்படுகிறது.