இந்தியாவின் மிகப்பெரிய சனி பகவான் கோயில்
, திங்கள், 12 ஜனவரி 2009 (13:05 IST)
இந்த வாரப் புனிதப் பயணத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய சனி பகவான் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பாய் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் தோன்றியது பற்றிய கதை ஒன்று உள்ளது. அதாவது இந்த கோயிலின் பூசாரி நந்திகிஷோர் மீனா கூறுகையில், என்னுடைய மாமியாரான மதுபாலா சுரேந்தர் சிங் மீனா ஜெய்ப்பூரை சேர்ந்தவர். அவருக்கு சேவை மனப்பான்மை அதிகம். அவருடைய நிலம் ஒன்று பாய் கிராமத்தில் இருந்தது. அங்கு ஒரு இல்லத்தைத் துவக்க வேண்டும் என்று மதுபாலா விருப்பப்பட்டார். அதன் காரணமாக அங்கு கட்டடம் கட்டும் பணி துவங்கியது. அடிக்கல் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது அங்கு சனி பகவானின் திருவுருவச் சிலை கண்டெடுக்கப்பட்டது.இதையடுத்து மதுபாலா பல அனுபவம் வாய்ந்த நபர்களிடம் எல்லாம் கலந்து ஆலோசனை செய்து இறுதியாக இங்கு மிகப்பெரிய சனி பகவான் ஆலயத்தை எழுப்பினார். இல்லம் உருவாக வேண்டிய இடத்தில் சனி பகவானின் ஆலயம் உருவானது.2002
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி கோயில்
கட்டி முடிக்கப்பட்டு சனி பகாவனின் சிலை நிறுவப்பட்டது. மேலும் இந்த கோயிலில் அரிய சிலைகளான வடக்கு நோக்கியபடி விநாயகர் சிலையும், தெற்கு நோக்கியபடி அனுமன் சிலையும் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தி என்ற திருவிழா 5 நாட்களுக்கு நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சனி பகவானை வழிபாடு செய்வார்கள்.
எப்படி செல்வது
சாலை மார்கம் - கந்த்வா அல்லது இந்தூரில் இருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் செல்லலாம்.
ரயில் மார்கம் - இந்தூர் - கந்த்வா மீட்டர்கேஜ் ரயில் பாதையில் வரும் சோரல் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.
விமான மாரகம் - இந்தூரில் உள்ள தேவி அஹில்யா விமான நிலையம் அருகில் உள்ளது.