Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புது‌ப்புன‌ல் மாத இத‌ழ் அ‌றிமுக‌ம்

புது‌ப்புன‌ல் மாத இத‌ழ் அ‌றிமுக‌ம்
, வியாழன், 3 டிசம்பர் 2009 (12:27 IST)
சிறுகதை, மொ‌ழி‌ப்பெய‌ர்‌ப்பு கதைக‌ள், க‌விதை என ப‌ல்வேறு இல‌க்‌கிய‌ப் படை‌ப்புகளை‌த் தா‌ங்‌கி ஒ‌வ்வொரு மாதமு‌ம் வெ‌ளிவரு‌ம் புது‌ப்புன‌ல் எ‌ன்ற மாத இத‌ழை இ‌ல‌க்‌கிய‌ப் ‌பி‌ரிய‌‌ர்களு‌க்கு த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் அ‌றிமுக‌ப்படு‌த்து‌கிறது.

அ‌க்டோப‌ர் மாத‌ம் புது‌ப்புன‌ல் இத‌‌ழி‌ன் முத‌ல் ப‌தி‌ப்பு வெ‌ளியானது. இத‌ன் ஆ‌சி‌ரிய‌ர் ஆ‌ர். ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன். இணை ஆ‌சி‌ரிய‌ர் லதா ராம‌கிருஷ‌்ண‌ன், ‌நி‌ர்வாக ஆ‌சி‌ரிய‌ர் சா‌ந்‌தி ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன்

புது‌ப்புனலு‌க்கு‌த் தேவை‌யி‌ல்லை ‌பிரகடன‌ம்
நீ‌ர்வளமே அத‌ன் ‌நிரூபண‌ம்! வாசக‌த்தை முழ‌க்க‌த்துட‌ன் வெ‌ளிவ‌ந்து‌ள்ளது அத‌ன் இர‌ண்டாவது ப‌தி‌ப்பான நவ‌‌ம்ப‌ர் மாத இத‌ழ்.

இ‌ந்த பு‌த்தக‌ம் செ‌ன்னை, கோய‌ம்பு‌த்தூ‌‌ர், மதுரை, கா‌ஞ்‌சிபுர‌ம், ‌திரு‌ச்‌சி, ‌திருநெ‌ல்வே‌லி, ‌‌தி‌ண்டு‌க்க‌ல், வேலூ‌ர், சேல‌ம், புதுவை, இல‌ங்கை போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் ‌வி‌ற்பனை‌‌யி‌ல் உ‌ள்ளது. இத‌ன் ‌விலை 15 ரூபா‌ய் ம‌ட்டுமே.

webdunia photo
WD
நவ‌ம்ப‌ர் மாத இத‌ழி‌ல், கா‌ப்கா‌வி‌ன் ப‌ட்டி‌க் கலைஞ‌‌ன் எ‌ன்ற ‌சிறுகதை‌யினை மு‌ன்வை‌த்து ஆ‌ர். மு‌த்து‌க்குமா‌ர் எ‌ன்பவ‌ர் செ‌ய்து‌ள்ள அ‌ய்வை மைய‌ப்படு‌த்‌தி இ‌ந்த இத‌‌ழ் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

ப‌ல்வேறு எழு‌த்தாள‌ர்க‌ளி‌ன் கதைக‌ள், க‌விதைக‌ள், நாடக‌ம், மொ‌ழிபெய‌ர்‌ப்பு தொட‌ர் நாவ‌ல் என ப‌ல்வேறு அ‌ம்ச‌ங்களையு‌ம் தா‌ங்‌கி ‌நி‌ற்‌கிறது இ‌ந்த புது‌ப்புன‌ல் இத‌ழ்.

புது‌ப்புன‌ல் இத‌ழில‌் பு‌திய க‌விஞ‌ர் அ‌றிமுக‌ம் பகு‌தி‌யி‌ல் வெ‌ளியா‌கி‌யிரு‌க்கு‌ம் க‌விஞ‌ர் எ‌ன். ராஜகோபா‌ல‌னி‌ன் க‌விதைக‌‌ளி‌ல் ‌சில...

அ‌ன்று இல‌ங்கையை எ‌ரி‌த்தது வானர‌ம் ஒ‌ன்று...
இ‌ன்றோ வானர‌ங்க‌ள் ஏ‌ற்கனவே எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம்
இல‌ங்கை நெரு‌ப்பு‌க்கு எ‌ண்ணெ‌ய் வா‌ர்‌த்து
இரு‌க்கு‌ம் த‌மிழ‌ர்களையு‌ம்
இன‌ப்படுகொலை‌க்கு இரையா‌க்கு‌கி‌ன்றன.
தொ‌‌ட்டி‌ல்க‌ள் ஆ‌ட்ட‌ப்படுவது உ‌ண்மைதா‌ன் -
பி‌ள்ளையை‌க் ‌கி‌ள்‌ளி‌வி‌ட்டு அ‌ல், கொ‌ன்றுபோ‌ட்டு.

ஒருவேளை உணவு கூட ‌‌நிறைவா‌ய்‌க் ‌கிடை‌க்க‌ப்பெறாத
உ‌யி‌ர்‌ப்‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ‌தின‌ம்
பல கோடி ம‌க்க‌ள் நா‌ட்டில‌் ப‌ட்டி‌னியா‌ய்..
எ‌ட்டு ம‌ணி நேர‌ம் உ‌ண்ணா‌நிலை‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்து‌ம்
அர‌சிய‌ல்வா‌திகளு‌க்கு
எலு‌மி‌ச்சை‌ச் சாறு கொடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌‌கிறா‌ர்க‌ள்
தொ‌ண்ட‌ர்க‌ள்.

ஆ‌ங்கா‌ங்கே அடி‌க்கடி ஆ‌யிர‌க்கண‌க்‌கி‌ல்
குடிசைக‌ள் எ‌ரி‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
இ‌ந்‌தி‌ய‌ப் பொருளாதார‌ம் ஏ‌ற்ற‌ம் கா‌ண்‌கிறதா‌ம்.
ஏ‌ழ்மையை அக‌ற்றுவத‌ற்கு ப‌திலாக
ஏழைகளை அக‌ற்‌றினாலா‌யி‌ற்று.

இவைக‌ள் ‌சில சா‌ன்றுக‌ள்தா‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil