Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 32வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியுள்ள புத்தகக் காட்சி ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறும்.

இங்கு புத்தக விற்பனைக்காக 600 அரங்குகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை நடைபெற்ற துவக்க விழாவில் சிறந்த எழுத்தாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 6 பேருக்கு கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil