உறங்கிய வாட்கள் விழிக்கின்றன,
துரோகமும் வஞ்சகமும் கை குலுக்குகின்றன,
பாண்டியரில் துவங்கிறது மதுரையின் சகோதர யுத்தம்
போரின் காயங்களை ஆற்றுமா காதலியின் அணைப்பு,
மதுரையில் சிரிக்கிறது புத்தரின் பல்,
இலங்கையில் துள்ளிய பாண்டிய மீன்கள்
சிம்மாசனம் ஏறும் படியாய் தந்தையின் தலை
வேண்டாப் பகைக்கு விருந்து வைத்த வினை
அரசனினும் புனிதம் அவனின் வாள்
புத்தகத்துக்குள் ஒரு சினிமா - சந்திரஹாசம்.