Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேராசிரியர் அறிவரசனின் ‘புத்தன் பேசுகிறேன்’

புத்தக மதிப்புரை

பேராசிரியர் அறிவரசனின் ‘புத்தன் பேசுகிறேன்’
, புதன், 8 செப்டம்பர் 2010 (17:35 IST)
WD
தமிழீழத்திற்குச் சென்று, அங்கேயே இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து அம்மக்களுக்குத் தூய தமிழ் கற்பித்தோடு நிற்காமல், தமிழீழம் என்பதென்ன என்று கண்டுவந்தவர் பேராசிரியர் அறிவரசன். அவருடைய கவிதை வெளியீடான ‘புத்தன் பேசுகிறேன்’ முழுக்க முழுக்க ஈழத் தமிழினத்தின் விடுதலை நியாயத்தைத்தான் பலமாக பேசுகிறது.

ஈழத் தமிழினம் படுகொலை செய்யப்பட்டதையும், அதைத் தடுத்து நிறுத்த திராணியற்று நின்ற தமிழ்நாட்டையும் சுட்டி அறிவரசன் எழுதியுள்ள ‘தலைமையின்றி’ என்ற கவிதை, இந்திய - இலங்கை உறவையும் கூறுகிறது.

நேற்று,
இந்தியா கொடுத்தது;
குண்டு வீசி
இலங்கை கொன்றது

இன்றும்
இந்தியா கொடுக்கிறது;
நம் உறவுகளை
முகாமில் அடைத்து
இலங்கை கொல்கிறது.

தேர்தல் தலைவர்கள்
திசைக்கு ஒருவராய்
ஆதாய அரசியலுக்காக
அல்லாடித் திரிகிறார்கள்!

உணர்வுள்ள இளைஞர்கள்
செயலூக்கத் தலைமையின்றித்
திகைத்து நிற்கிறார்கள

என்று எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் தேர்தல் தேவைகளை பல கவிதைகளில் சாடியுள்ள அறிவரசன், முறிந்து விட்டதோ என்ற கவிதையில் எழுப்பிய கேள்விக்கு வேறு யார் விடை கூற முடியும்?

ஒரு தமிழ்ச்செல்வம்
கொல்லப்பட்டபோது
அவர்க்குத் தசையாடியது!

கவிதைஎன்ற பெயரில்
இரங்கலுரை
எழுத முடிந்தது!

இலட்சம் தமிழர்கள்
கொல்லப்பட்டபோது
தசையாடவில்லை
இறுகிப் போய்விட்டதோ?

இரங்கலுரை
எழுதவில்லைஎழுதுகோல்
முறிந்துவிட்டதோ?

என்று கேட்டுள்ளார்.

விடுதலைக் குரல்

தமிழினத்தின் தலைமைகளை மட்டும் சாடி பல கவிதைகள் எழுதியதோடு நிற்காமல், காட்டிக்கொடுத்தவர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார் தன் கவிதையால்....

அன்று சிலர்
காட்டிக்கொடுத்ததால்
சிறைப்பட்டிருந்த
சீதையைமீட்க முடிந்தது!

இன்று சிலர்
காட்டிக்கொடுத்ததால்
முள்வேலிச் சிறைக்குள்
மூன்று இலட்சம் தமிழர்களைப்
பூட்ட முடிந்தது!

அன்றும் இன்றும்
காட்டிக் கொடுத்தவர் காட்டில
நல்ல மழை!

ஏன் தமிழ்நாட்டில் விடுதலைக் குரல் கேட்கிறது? இதோ அறிவரசனின் பதில்:

கிழக்கு வங்காளியரின்
தாயக விடுதலைக்கு
இந்தியா உதவியத
அதனால்தான்
மேற்கு வங்கம்
விடுதலை கேட்கவில்லை

ஈழத் தமிழரின்
தாயக விடுதலையை
இந்தியா எதிர்க்கிறது

அதனால்தான்
தமிழ்நாட்டில்
விடுதலைக் கேட்கிறது

webdunia
WD
பயங்கரவாதிகள் யார்?

கோரும் உரிமைகளைக்
கொடுக்க மறுக்கிறார்கள்...

உரத்துக் குரல்கொடுத்தால்,
’ஒடுக்குவோம்’ என்கிறார்கள
அறவழியில் போராடினாலும்
அடித்துத் துவைக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம் செய்தால்
சிறையில் அடைக்கிறார்கள
தொடர்ந்து போராடினால்
துவக்கால் அடிக்கிறார்கள்

துவக்கை எதிர்க்கத்
துவக்கைத் தூக்கினால்
பயஙகரவாதிகள் என்ப்
பட்டம் சூட்டுகிறார்கள்!

பயங்கரவாதிகள் யார்?
உரிமை கேட்பவர்களா?
கேட்பதை மறுப்பவர்களா?

என்று மக்களை ஏமாற்றும் அடைமொழிக்கு விளக்கம் கேட்டுள்ளார் அறிவரசன்.

எல்லாவற்றிற்கும் சிகரம் போல் உள்ளது அவரது கடைசிக் கவிதை. அதுவே புத்தன் பேசுகிறேன். தமிழர்க்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு புத்தன் பேசியதாக அறிவரசன் எழுதியுள்ள இறுதிக் கவிதை, தமிழினப் படுகொலை கண்டு சிதைந்துப் போன ஒரு உள்ளத்தின் குமரலாகும். எதிர்காலத்தில் வரலாற்றை உரைக்கப்போகும் கவிதையது.

ஒவ்வொரு கவிதையின் கீழும் தமிழீழ விடுதலையை முன்னெடுத்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலை குறித்துப் பேசியதைத் தந்துள்ளார். அதுவே தமிழீழ விடுதலை வரலாற்றையும் அதன் நியாயத்தையும் உரைக்கிறது.

வெளியீடு: தமிழ்மதி பதிப்பகம்
திருநெல்வேலி. பேசி: 97151 11589

தொடர்புக்கு:

திருவள்ளுவர் இல்லம்
4/42, வ.உ.சி. தெரு,
கடையம் - 627 415
நெல்லை மாவட்டம்
பேசி: 96881 40657

Share this Story:

Follow Webdunia tamil