குழந்தைகள் பெரியவர்களின் சொற்களைக் கேட்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும். அதுபோன்ற பெரியவர்கள் கூறிய வார்த்தைகள்தான் இவை.
தலைகுனிந்து படித்தால் உலகில் தலைநிமிர்ந்து வாழலாம்.
படிப்பை நிறுத்தினாலும், தொடர்ந்து படிப்பதை நிறுத்தாதே.
படிப்பாளியாக இருப்பதைவிட படைப்பாளியாக ஆவதற்கு முயற்சி செய்.
அனுபவம் இல்லாத படிப்பைவிட, படிப்பு இல்லாத அனுபவம் மேலானது.
வாய்ப்பை எதிர்பார்க்காமல் உண்டாக்குபவன் அறிஞன்.
தகுதியில்லாத புகழ்ச்சி மறைமுகமான அவதூறு.
எந்த முயற்சியும் எடுக்காதவர்களுக்கு கடவுளுமே உதவுவதில்லை.
உன்னைத் தவிர யாரும் உனக்கு அமைதி தர முடியாது.
நேர்வழியே ஒழுக்கத்துக்குச் செல்லும் குறுக்கு வழி.
வாதாடப் பலருக்குத் தெரியும். உரையாடச் சிலருக்கேத் தெரியும்.
அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும்.