நிலாவும், வெள்ளி கிரகமும் ஒன்றோடொன்று நெருங்கி வரும் அற்புதக் காட்சி விண்வெளியில் நிகழ்கிறது. இன்று பார்க்காவிட்டால் இதோடு அடுத்த ஆண்டுதான் வெள்ளியை நாம் பார்க்க முடியும்.
இந்த அரிய காட்சியை சனிக்கிழமை இரவு வெறும் கண்களால் தெளிவாகக் காணமுடியும் என்று தில்லியில் உள்ள நேரு கோளரங்க இயக்குநர் ரத்னஸ்ரீ தெரிவித்தார்.
வெள்ளி நிலவே என்று கவிஞர்கள் நிலாவை வர்ணிப்பதுண்டு. ஆனால் இன்று நிஜமாகேவ வெள்ளியும், நிலவும் இணைந்து வெள்ளி நிலவே என்று அழைக்கும் வகையில் இருக்கப் போகிறது.
பொதுவாக நிலவுக்கு அருகே வெள்ளி கிரகம் மின்னுவதை பிப்ரவரி மாதத்தில் மட்டுமே காண முடியும். மார்ச் மாதத்தில் நிலாவின் பின்னால் வெள்ளி மறைந்துவிடும்.
அதற்குப் பிறகு 2010ம் ஆண்டில் மட்டுமே வெள்ளியை நாம் மீண்டும் பார்க்க முடியும்.
இன்று சூரியன் மறைந்த 3 மணி நேரத்துக்கு பிறகு மேற்கு திசையில் பிறை நிலவுக்கு மிக அருகில் வெள்ளிக் கிரகத்தை தெளிவாகப் பார்க்க முடியும் என்று தில்லியில் உள்ள நேரு கோளரங்க இயக்குநர் ரத்னஸ்ரீ தெரிவித்தார்.