Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப‌ள்‌ளி புத்தக சுமையை குறைக்க‌க் கோ‌ரி வழ‌க்கு

ப‌ள்‌ளி புத்தக சுமையை குறைக்க‌க் கோ‌ரி வழ‌க்கு
, செவ்வாய், 3 நவம்பர் 2009 (11:04 IST)
webdunia photo
WD
பள்ளிக்கூட குழந்தைக‌ளை ‌விட, அவ‌ர்க‌ள் சும‌க்கு‌ம் புத்தக‌ப் பை‌யி‌ன் எடைதா‌ன் அ‌திகமாக இரு‌க்‌கிறது. பொ‌தி சும‌ப்பது போல அனை‌த்து குழ‌ந்தைகளு‌ம் த‌ங்களது முது‌கி‌ல் பு‌த்தக‌ப் பையை சும‌ந்து கொ‌ண்டு செ‌ல்‌கி‌ன்றன‌ர். இ‌ந்த பு‌த்தக பை‌யி‌ன் சுமையை‌க் குறைக்க வேண்டும் என்று கோ‌ரி சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வாணிஸ்ரீ ஞானேஸ்வரன் சென்னை உய‌ர்‌நீ‌தி‌ம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் 5,908 அரசு பள்ளிகளும், 3,474 தனியார் பள்ளிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் மாணவர்கள் ஒரு கோடி மாணவர்கள் உள்ளனர். ரூ.80 லட்சத்தில் 8 கோடி இலவச புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. புத்தக சுமை மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மாணவர்களின் எடையில் 50 சதவீதத்திற்கு மேல் புத்தக எடை உள்ளது. தனியார் பள்ளிகளில் தேவையில்லாமல் அதிக புத்தகங்கள், நோட்டுகள் வாங்க சொல்லுகிறார்கள். தினசரி எல்லா புத்தகங்களையும், நோட்டுகளையும் பள்ளிக்கு எடுத்து வருமாறு வற்புறுத்தப்படுகிறார்கள்.

எனவே, கால அட்டவணையை புதிதாக அமைத்து அன்றாடம் குறைந்த அளவு நோட்டு புத்தகங்களை பள்ளிக்கு எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு அனுமதிக்க வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி
webdunia
webdunia photo
WD
இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவர்கள் பயன் அடையும் வகையில் செய்யாவிட்டால் அவர்களுக்கு முதுகுவலி போன்ற பிரச்சினை ஏற்படும்
எ‌ன்று மனுவில் கூறியுள்ளா‌ர்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.பானுமதி, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் விசாரித்தனர். இதுபற்றி பதில் தருமாறு அரசுக்கு தா‌க்‌கீது அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil