Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிமிடத்துக்கு 34 பேர் பிறப்பு, 10 பேர் இறப்பு

Advertiesment
நிமிடத்துக்கு 34 பேர் பிறப்பு, 10 பேர் இறப்பு
, வெள்ளி, 6 மார்ச் 2009 (11:22 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் ஒரு ‌நி‌மிட‌த்‌தி‌ல் 34 குழ‌ந்தைக‌ள் ‌பிற‌ப்பதாகவு‌ம், 10 பே‌ர் உ‌யி‌ரிழ‌ப்பதாகவு‌ம் ‌பிற‌ப்பு இற‌ப்பு ப‌திவு‌த் துறை மூல‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 49 ஆயிரத்து 481 பிறப்புகளும், 14 ஆயிரத்து 475 இறப்புகளும் பதிவு செய்யப்படுவதாக இந்திய பதிவாளர் பொது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, நிமிடத்துக்கு 34 பிறப்புகளும், 10 இறப்புகளும் பதிவு செய்யப்படுகின்றன.

ஆனால் இது முழுமையான விவரம் அல்ல. பிறப்பு, இறப்பை பலர் பதிவு செய்வது இல்லை. ஆகவே, இந்த புள்ளிவிவரம், உண்மையான பிறப்பு, இறப்புகளில் 68 சதவீதம் மட்டுமே என்றும் இந்திய பதிவாளர் பொது அலுவலகம் கூறியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒரு நிமிடத்தில் நிகழும் மரணமும், ‌பிற‌ப்பும் இதை விட அதிகம் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil