ரஷ்யாவில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் புகழ்பெற்ற ஆடைகள் வடிவமைப்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த கிரா பிளாஸ் டினா என்ற பள்ளி மாணவி, உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
தினமும் பகல் பொழுதில் பள்ளியில் இருக்கும் டினா, மாலை நேரத்தில் தனது அலுவலகத்தில் ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
அவரது தந்தை ஏற்கனவே பல துணிக்கடைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். மேலும் டினாவின் உதவியுடன் பல கடைகளையும் திறந்து கொண்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் ஒரு துணிக்கடையை திறக்கவும் டினா திட்டமிட்டுள்ளாராம்.
டினா நடத்தும் பேஷன் ஷோக்களில் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலங்கள் கூட கலந்து கொண்டு இருக்கிறார்கள். பொறந்தா இப்படி இருக்கணும்.