Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொள்ளையனை ‌மிர‌ட்டிய சிறுமி

Advertiesment
கொள்ளையனை ‌மிர‌ட்டிய சிறுமி
, வெள்ளி, 20 நவம்பர் 2009 (11:10 IST)
தனது ‌‌வீ‌ட்டி‌ல் கொ‌ள்ளை அடி‌க்க நுழை‌ந்த ‌திருடனை தை‌ரியமாக ‌மிர‌ட்டிய ‌சிறு‌மி‌யினா‌ல், கொ‌ள்ளைய‌ன் மா‌ட்டி‌க் கொ‌ண்டா‌ன். அ‌ந்த ‌சிறு‌மி‌யி‌ன் தை‌ரிய‌த்தை அனைவரு‌ம் பாரா‌ட்டு‌கி‌ன்றன‌ர்.

இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ நக‌ரி‌ல் வ‌சி‌த்து வருபவ‌ர்க‌ள் மார்க்-ராச்சல் த‌ம்ப‌தி‌யின‌ர். இவர்களுக்கு ரெபெக்கா(10), பெய்ஸ்டி கோலி(5), சன்னிமாக்(4) என்னும் 3 குழந்தைகள் உண்டு.

சம்பவ‌ம் நட‌ந்த ‌தினத்தன்று நள்ளிரவு ஒரு கொள்ளையன் இவர்களது வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்து விட்டான். மற்றவர்கள் எல்லாம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பெய்ஸ்டி மட்டும் கண் விழித்து கொள்ளையனை பார்த்து‌ள்ளா‌ள். வந்த கொள்ளையனோ, மேஜையில் இருந்த கார் சாவியை எடுத்திருக்கிறான்.

இதை பார்த்து திடுக்கிட்ட பெய்ஸ்டி, `ஏய், மரியாதையா என் அப்பாவோட கார் சாவியை வச்சிடு. இல்லையன்னா நடக்கிறதே வேற...' என்று சத்தம்போட்டு மிரட்டினாள். இதைக் கேட்டு அவளது பெற்றோரும், சகோதரனும், சகோதரியும் விழித்துக் கொள்ள கொள்ளையன் பாடு திண்டாட்டமாகிப் போய்விட்டது.

கு‌டு‌ம்ப‌த்‌தின‌ர் அனைவரு‌ம் ஒ‌ன்று சே‌ர்‌ந்து கொ‌ள்ளையனை ‌பிடி‌த்து‌ காவ‌ல்‌துறை‌யிட‌ம் ஒப்படைத்தனர். கொள்ளையன் பெயர் டீன் அப்லெக்(18) எ‌‌ன்பது ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. தற்போது அவன் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

Share this Story:

Follow Webdunia tamil