Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒளிச்சுவடு என்ற கல்வி இதழ் வெளியீடு

ஒளிச்சுவடு என்ற கல்வி இதழ் வெளியீடு
, வியாழன், 17 செப்டம்பர் 2009 (12:03 IST)
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் ப‌ள்‌ளி மாணவ, மாண‌விய‌ரி‌ன் ‌திறனை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாகவு‌ம், அவ‌ர்களு‌க்கு ஊ‌க்க‌ம் அ‌ளி‌க்கு‌ம் ‌விதமாகவு‌ம் ஒ‌ளி‌ச்சுவடு எ‌ன்ற க‌ல்‌வி இத‌ழ் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஒளிச்சுவடு என்ற கல்வி இதழினை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் போன்றவை இந்த இதழில் வெளியிடப்படும். இந்த இதழ் ஒளிச்சுவடு என்ற பெயரில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.

மேலும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்த்திட அறிவியல் கருத்துக்கள், அறிவியல் அறிஞர்களின் சாதனைகள், குறிப்புகள் வெளியிடப்படுகின்றது. மாநில அளவில் முதலிடம் பெற்ற 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களின் பேட்டியும் இடம் பெறுகிறது.

இந்த இதழில் விளையாட்டுச் செய்திகளும், வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்களும் இடம் பெறும். இந்த இதழ் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சி அறிவித்துள்ள நலத்திட்டங்கள், செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் பற்றி வரும் இதழ்களில் வெளியிடப்படும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil