Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் கையாளும் வழிமுறைகள்

சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் கையாளும் வழிமுறைகள்
, செவ்வாய், 8 டிசம்பர் 2015 (16:33 IST)
சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. கல்வி கற்பது கடமை மட்டும் அல்ல உரிமையும் தான்.


 

 
1. தினமும் மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும். அவர்கள் சிறு சோம்பலை சந்திக்க நேரிடும். இவற்றை தடுக்க ஆசிரியர்கள் சிறுகதைகளை சொல்லி உற்சாகப்படுத்தலாம்.
 
2. மாணவர்கள் படித்தவுடன் எழுதி பார்க்க சொல்வது, முக்கியமான சில குறிப்புகளை தேர்வு செய்து கொடுத்து ஆசிரியர்கள் எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம்.
 
3. பொதுவாக ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் மாணவர்களை துன்புறுத்த கூடாது. இதனால் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும்.
 
4. வகுப்பறையில் மதிய உணவிற்குப் பின்பு மாணவர்களுக்கு தூக்கம் வரும். இதனை திசை திருப்ப ஆசிரியர்கள் சில சுவையான தகவல்கள் அல்லது ஜோக்ஸ் போன்றவற்றை கூறலாம்.
 
5. செயல்முறை, சமூக, தனிமனித மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வழிமுறைகளை எளிய வகையில் மாணவர்களுக்கு புகட்ட வேண்டும்.
 
6. செய்முறைக் கற்றல்முறை மாணவனின் தேவைகளையும், ஆர்வத்தையும் இனங்கண்டு அவனை அதிக ஈடுபாட்டுடன் கற்கச் செய்வது ஒவ்வொரு ஆசிரியருடைய கடமையாகும்.
 
7. பொறுமை, சகிபுத்தன்மை, தன்னார்வம் மற்றும் சுயமதிப்பீட்டுத் திறன் போன்ற பண்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவசியமாக கற்பிக்க வேண்டும்.
 
8. பாடத்திட்டத்தின் செயல்முறை பயிற்சிகள், புதியவற்றை அறியவும், புதிய கோணங்களில் சிந்திக்கவும் மாணவர்களுக்கு உதவும் என்பதை ஆசிரியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
9. கூட்டாக சேர்ந்து படிக்கும் முறையை கையால்வதால், மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil