Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்ன சின்ன வயசுல..

சின்ன சின்ன வயசுல..
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:26 IST)
விளையும் பயிர் முளையிலேயேத் தெரியும் என்பது போல பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்றவர்கள் சிலர் இளம் வயதிலேயே தங்களது திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே குழந்தைகளே... உங்களது திறனையும், ஊக்கத்தையும் கணினி விளையாட்டுகளிலோ, தொலைக்காட்சிப் பார்ப்பதிலோ செலவிடாமல் ஆக்கத்துக்காக பயன்படுத்துங்கள்.

ராஜா தேசிங்கு முரட்டுக் குதிரை ஒன்றை அடக்கினார். அப்போது அவருக்கு வயது வெறும் 9 தான்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு 10 வயதாக இருக்கும்போது, குறுகலான ஆழமான குழிக்குள் விழுந்த பந்தை எடுப்பதற்கு தண்ணீரை ஊற்றி பந்தை மேலே வரவழைக்கும் உத்தியை பயன்படுத்தினார்.

உலகம் உருண்டையானது என்று கண்டறிந்து அதைப் பற்றி விளக்கிப் பேசிய கொலம்பசுக்கு வயது 12 தான்.

கவிக்குயில் என்று புகழப்படும் சரோஜினி நாயுடு, தனது 13ம் வயதிலேயே ஆங்கிலத்தில் அற்புதமான கவிதைகளை இயற்றுவதில் வல்லமை பெற்றிருந்தார்.

நமக்கு தேசிய கீதத்தை அளித்த ரவீந்திரநாத் தாகூர், ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தை வங்க மொழியில் மொழி பெயர்க்கும் போது 14 வயது ஆகியிருந்தது.

முகாலய மன்னர் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது அக்பர்தான். அவர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட போது அவருக்கு 14 வயதுதான். இப்போது சொல்வதென்றால் அவருக்கு ஓட்டு போடும் வயது கூட ஆகவில்லை. ஆனால் அவர் மன்னராக இருந்து ஒரு ராஜ்யத்தையே ஆண்டுள்ளார்.

எனவே பிள்ளைகளே... மேற் கூறிய அனைவரையும் விட உங்களுக்கு அதிக திறமைகளும், வாய்ப்புகளும் இருக்கலாம். அவற்றை நீங்கள் எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்.

நாளைய தலைமுறை‌யினரு‌க்கு ‌நீ‌ங்க‌ளு‌ம் ஒரு வரலா‌ற்று‌த் தலைவராக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்துட‌ன் முய‌ற்‌சி செ‌ய்யு‌ங்க‌ள்.

வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil