பாலைவனத்தில் வாழத் தகுதி வாய்ந்த ஒரே உயிரினம் என்று கூடச் சொல்லலாம் ஒட்டகத்தை.
அதன் ஜீரண அமைப்பு, தோல் பகுதி, கால்கள் என எல்லாமே பாலைவனத்தில் வாழும் தகுதியை ஒட்டகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டகத்திற்கு மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பல ஆற்றல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
ஒட்டகம் 15 மணி நேரம் தொடர்ந்து நடக்கும் ஆற்றல் பெற்றது.
ஒட்டகம் ஒரு நாளில் சுமார் 40 லிட்டர் பால் தரும்.
அதிகபட்சமாக ஒரு ஒட்டகம் 540 கிலோ எடை வரை இருக்கும்.
ஒட்டகத்தின் சராசரி ஆயுட்காலம் 86 ஆண்டுகள்.
ஒட்டகம் பிறந்து 24 மணி நேரத்தில் எழுந்து நடக்கத் தொடங்கிவிடும்.
ஒட்டகத்தின் பிறந்த குட்டி மூன்றரை அடி உயரம் இருக்கும்.