நடிகர் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் அதிகமான பணத்தைக் கொடுத்து செலவழிக்கச் சொல்லும் தந்தையின் வழியில் இங்கு ஒரு ஆசிரியர் செயல்பட்டுள்ளார்.
தண்டனைன்னா இப்படித்தான் இருக்கணும்னு நெத்தி பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறார்.
மலேசியாவில் ஒரு மாணவனின் சட்டைப்பையில் சிகரெட்டு பெட்டியும், லைட்டரும் இருந்ததை பார்த்த ஒரு ஆசிரியர் அந்த மாணவனுக்கு வினோதமான தண்டனை விதித்தார். அந்த மாணவனின் வயதோ வெறும் 16 மட்டும்தான். அவனுக்கு அளித்த தண்டனை என்ன தெரியுமா?
அவன் தொடர்ந்து 2 மணி நேரத்திற்குள் 42 சிகரெட்டுகளை புகைக்க வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. சிறுவன் இந்த தண்டனையை அனுபவித்ததை பள்ளிக்கூடமே கூடி நின்று வேடிக்கை பார்த்ததுதான் மிகப்பெரிய தண்டனை என்று சொல்ல வேண்டும்.
இதுபற்றி அந்த மாணவன் தன் பெற்றோரிடம் புகார் செய்தான். பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்ய. இதற்கு பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுதான் வறுத்தத்திற்குரிய விஷயம்.
பிள்ளைய சரியா வளர்க்காமல், பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல...