பஹாமா நாட்டைச் சேர்ந்த ஓசியானிக்-2 என்ற நவீன வசதிகளுடன் கூடிய கல்விச்சுற்றுலா கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்த கப்பலில் 110 மாணவிகள், 92 மாணவர்கள், 164 கப்பல் ஊழியர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த கப்பலிலேயே மாணவ-மாணவிகள் தங்கி படிப்பை தொடரவும் வசதி உள்ளது.
இந்த கல்விக்கப்பல் தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. 11ஆம் தேதி வரை சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்.
அப்போது கப்பலில் தங்கியுள்ள மாணவ-மாணவிகள் இந்திய கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ள சென்னை, மகாபலிபுரம், காஞ்சிபுரம், மதுரை உள்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.