Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவாகும் நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கு

Advertiesment
நுங்கம்பாக்கம்
, செவ்வாய், 30 மே 2017 (10:35 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன்  படமாக இயக்க இருக்கிறார். ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்தற்கு `சுவாதி கொலை வழக்கு'  என பெயரிட்டுள்ளனர்.

 
 
சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியாக ஆயிரா நடித்துள்ளார். மனோ என்ற புதுமுகம் ராம்குமார் வேடத்திலும்,  ஏ.வெங்கடேஷ் என்பவர் ராம்ராஜ் என்ற வக்கீல் வேடத்திலும் நடித்திருக்கிறார். சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடிக்கிறார். 
 
இயக்குநர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் விஜயகாந்த் நடித்த `உளவுத்துறை', அருண் விஜய் நடித்த `ஜனனம்' மற்றும் `வஜ்ரம்'  படங்களை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமாரின் மூன்று ஹீரோயின்கள் இவர்கள் தான்