பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள 206 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் வந்துள்ளனர். இவர்களுக்காக ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு வீரகள் தங்குவதற்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இங்கு வீரர்களுக்கு உதவியாக பணிப்பெண்கள் வசதியை அமைத்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் மொராக்கோ நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஹசன் சாடா (22) தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இரண்டு பணிப்பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வீரரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.