Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் தொடர் தோல்வி

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் தொடர் தோல்வி

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் தொடர் தோல்வி
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (05:30 IST)
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் ’ஏ’ பிரிவில் இடம்பெற்று உள்ள இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா இணை முதல் போட்டியில் ஜப்பானின் மட்சுடோமோ - தகாஹிசி இணையை எதிர்க்கொண்டது. முதல் செட்டை ஜப்பானின் மட்சுடோமோ - தகாஹிசி இணை 21-15 என்ற கணக்கில் வென்றது. இரண்டாவது செட்டில் 21-10 என்ற புள்ளிக் கணக்கில் செட்டை வென்று ஜப்பானின் மட்சுடோமோ - தகாஹிசி இணை வெற்றிப்பெற்றது.


 
மகளிர் தனிநபர் வில்வித்தையில் ரவுண்ட் 16 என்ற காலிறுதிக்கு முந்தைய தகுதிசுற்று போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி அடைந்தார். உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் தீபிகா குமாரி, 2-வது இடம் வகிக்கும் சீன தைபே வீராங்கனை தான் யா டிங்கை எதிர்க்கொண்டார். தீபிகா குமாரி 27-28, 26-29, 27-30 என 0-6 என்ற புள்ளி கணக்கில் தான் யா-டிங்கிடம் தோல்வி அடைந்து, போட்டியில் இருந்து வெளியேறினார்.

மகளிர் தனிநபர் வில்வித்தையில் இந்திய வீராங்கனையான பாம்பாய்லா தேவியும் தோல்வி அடைந்தார். பாம்பாய்லா தேவி, மெக்சிகோ வீராங்கனை அலிஜென்டராவை எதிர்க்கொண்டார். போட்டியில் 26-28, 26-23, 27-28, 23-18 என 2-6 என்ற புள்ளி கணக்கில் பாம்பாய்லா தேவி தோல்வி அடைந்தார்.

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சுமீத் ரெட்டி- மானு அட்ரி இந்தோனேசியாவின் ஹெண்ட்ரா செட்டியாவான்- மொகமது அசான் ஜோடியை எதிர்கொண்டது.
போட்டியில், 18-21, 13-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது.

ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி நெதர்லாந்து அணியிடம் 1 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் போட்டி: குத்துச்சண்டையில் இந்தியா முதல் சுற்றில் வெற்றி