Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா - 2017 தமிழில் அறிமுகமான நடிகைகள்

சினிமா - 2017 தமிழில் அறிமுகமான நடிகைகள்
, வெள்ளி, 29 டிசம்பர் 2017 (16:04 IST)
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமாக இருந்தது. தமிழகத்தில் இருந்தும் கேரளா, ஆந்திரா, மும்பையில் இருந்தும் ஏராளமான நடிகைகள் வந்தனர். மொத்தம் 210 படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவற்றில்  கதாநாயகிகளாக நடித்துள்ள சுமார் 70 பேர் இந்த ஆண்டு அறிமுகமானவர்களே.
சாயிஷா
 
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்துக்கு 'வன மகன்' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் ரவி  பழங்குடியின இளைஞராக நடித்திருந்தார். இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்திருக்கிறார்.
 
யாருக்கும் தொல்லையின்றி தாங்களுன்று தங்கள் காடுண்டு என்று வாழும் பழங்குடி மக்களை, பணத்துக்காக வேட்டையாடும்  கார்ப்பொரேட்டுகள் பற்றி தமிழில் பெரிதாகப் படங்கள் வந்ததில்லை. முதல் முறையாக ஒரு வணிக சினிமாவில் அதைப்  பேசுபொருளாக்கியிருப்பதே பாரட்டப்படவேண்டியது.  ‘வனமகன்’. பல பேருக்கு படம்  பிடித்திருந்ததோ, இல்லையோ…  அதில் நடித்த சயிஷாவை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அதுவும் ‘டம் டம்’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து,  தமிழ் ரசிகர்கள் கிறங்கிப்போய் கிடக்கிறார்கள்.
webdunia
வனமகன்’ சயிஷாவின் பின்னால் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் சுற்றுவதாகக் கூறப்படுகிறது. வனமகன் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சயிஷா. மும்பையைச் சேர்ந்த இவர், ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி. அகில்  அக்கினேனி ஜோடியாக ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கத் தொடங்கிய சயிஷா, அஜய் தேவ்கனின் ‘ஷிவாய்’  ஹிந்திப் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழுக்கு வந்த சயிஷா, அடுத்து விஷால், கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை  ராஜா’ படத்தில் நடிக்கிறார்.
 
பிரியா பவானி சங்கர்
 
'மேயாத மான்' படத்தில் வைபவ் ஜோடியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். பிரபல செய்தி நிறுவனத்தில் செய்தி  வாசிப்பாளராக மூன்று வருடங்கள் இருந்தவர் பிரியா பவானி சங்கர். சீரியல் நடிகைகளில்  முன்னணியில் இருப்பவர்  கல்யாணம் முதல் காதல் வரை புகழ் பிரியா. இவர் சீரியலில் இருந்து விலக போவதாகவும், வெளிநாடு சென்று  படிக்கப்போவதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர். 
webdunia
இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஒரு புதிய படம் மூலம் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது. அந்த படம்தான் மேயாத  மான். பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' உள்ளிட்ட படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த  தயாரிப்பு  நிறுவனமான ஸ்டோன் பென்ச் சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'. ரத்தின குமார் இயக்கியிருக்கும்  இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா ஷங்கர் நடித்திருந்தனர்.
 
பார்வதி நாயர்
 
கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் பார்வதி நாயர். பார்த்திபனின்  கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் பார்வதி நாயர், சாந்தனு நடித்துள்ளனர். இதில் பார்வதி நாயருக்கு மலையாளிப் பெண்  வேடம். தமிழ் பேசுகிற மலையாளிப் பெண்ணாக நடித்துள்ளார்.
 
ஸ்ரத்தா
 
நடிகை ஸ்ரத்தா தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, கண்ணன் இயக்கிய இவன் தந்திரன், புஷ்கர்-காயத்ரி  இயக்கிய ‘விக்ரம் வேதா’, நிவின் பாலி நடித்த ‘ரிச்சி’ ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். அடுத்து உதயநிதி ஸ்டாலின்  ஜோடியாக நடிக்க இருக்கிறார். காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த அதிதி ராவ் ஹைத்ரி நடித்திருக்கிறார்.
 
வெண்பா
 
காதல் கசக்குதய்யா, பள்ளிப்பருவத்திலே படங்களில் நடித்த வெண்பா. துவாரகா ராஜா இயக்கத்தில் துருவா - வெண்பா நடிப்பில்  வெளியாகி இருக்கும் `காதல் கசக்குதய்யா'. இப்படத்தில் 10 மாதம் சுமந்து பெற்ற தாயை உயிருள்ள வரை காக்க வேண்டும்  என்ற அம்மா பாசத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர் துவாரகா ராஜா. மறுபுறத்தில் காதலியின் உயரம் குறைபாட்டால்  அவளது காதலை ஏற்க மறுத்து பின்னர் அவளிடமே சிக்கிக் கொள்கிறார் நாயகன். 
 
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாகவும், நாயகியாக வெண்பா  அறிமுகியுள்ள படம் 'பள்ளி பருவத்திலே'. இவர்களுடன் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி, தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி,  ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ,பள்ளி படிப்பின் போது, மாணவர்களுக்கு ஏற்படும் காதல்,  அதனால் ஏற்படும் பிரச்சனைகள் இந்த படத்தில் காட்டியுள்ளனர்.
 
அதிதிபாலன்
 
அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும், விமர்சனம்  ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது. அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை   நிகழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டியது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து வரும் நயன்தாரா  மற்றும் சமந்தா, ஸ்ருதி ஹாஸன் என்று பெரிய ஹீரோயின்கள் நடிக்க மறுக்க அருண் பிரபு தன்னை போன்றே புதுமுகங்களை தேர்வு செய்து அருவி படத்தை எடுத்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் பாராட்டியதால், மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை என்று  அதிதி அருவி பாலன்  ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
webdunia
இந்நிலையில் அருவி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அதிதி பாலனுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கூட  கிடைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
 
இந்த வருட புதுமுக நடிகைகளில் அதிக கவனம் பெற்றவர் ‘அருவி’ படத்தில் கதாநாயகியாக வந்த அதிதிபாலன். இவர் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து இருந்தார். கிளைமாக்ஸ்சில் நோய் முற்றி எலும்பும், தோலுமாக வந்து படம் பார்த்தவர்களை  உலுக்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அதிதிபாலனை வெகுவாக பாராட்டினர். சர்வதேச விருதுகளும் இந்த  படத்துக்கு கிடைத்துள்ளது. அதிதிபாலனுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய்ப்புக்காக படுக்கையை பகிறும் நடிகர்கள் - பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி தகவல்