Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்லாஹ்வின் தோழன் யார் தெரியுமா?; நபிகள்நாயகம்!

அல்லாஹ்வின் தோழன் யார் தெரியுமா?; நபிகள்நாயகம்!
எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. தனது வாழ்நாளெல்லாம் ஒருவன் தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்து விட்டு, மரணவேளையில்  கொடைவள்ளலாக மாறுவதால் என்ன பயன்? மாறாக, இவர்களைப் பார்த்து இறைவன் கோபம் அடைகின்றான். 

ஒருவன் பாவியாகவே இருந்தாலும், தர்மம்  செய்கின்ற கொடையாளியாக இருந்தால், அவன் அல்லாஹ்வின் தோழனாவான். தொழுகையாளியாக இருந்துகொண்டு தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்தால்  அல்லாஹ்வின் பாவியாவான்.
 
மனித உடலில் 360 எலும்புகளை ஏன் இறைவன் இணைய வைத்தான் தெரியுமா? ஒவ்வொரு இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமான செயலாகும் என்பதற்காக. நபிகள்நாயகம் அவர்கள், கஞ்சத்தனம் சாத்தானின் குணமாகும். கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கமாகும்.  கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகமாகும். கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் நம்மை  நாசப்படுத்தி விடும்.
 
ஒரு பெண் இரக்கமன்றி ஒரு பூனையை உணவு கொடுக்காமல் கட்டிப்போட்ட பாவத்தின் காரணமாக அவள் நரகத்தில் தள்ளப்பட்டாள், என்கிறார்கள் நபிகள்  நாயகம்(ஸல்) அவர்கள். தர்மசிந்தனையின் முக்கியத்துவம் பற்றி, அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவபெருமான் கொடுத்த வரமே வாஸ்து - தெரிந்து கொள்ளுங்கள்