ஷீரடி சாயிபாபாவின் போதனைகள்
ஷீரடி சாயிபாபாவின் போதனைகள்
பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ அங்கே கடவுள் இருப்பதில்லை.
* கடவுள் எல்லா ஜீவராசிகளுள்ளும் வசிக்கிறார். அவரே இவ்வுலகின் மிகப் பெரிய பொம்மலாட்டகாரர். மனிதன் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்.
* அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள் பயனற்றவை.
* ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும் சேவை செய்தும் நாம் மகிழ்வுடன் இருப்போம். உங்களது பெயரையும் வடிவத்தையும் நீக்கிவிட்டால் உள்ளே உணர்வு நிலை உங்களிடத்தும் அனைத்து உயிர்களிடத்தும் நிலை பெற்றுள்ளது. அது நானேயாகும். இதைப் புரிந்து கொண்டு உங்களிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் என்னைக் காண முயலுங்கள். இந்தப் பயிற்சியின் மூலம் என்னை அடைய முடியும்.
* கல்லறைக்குள் இருந்தாலும் நான் உயிரோடும் சக்தியோடும் இருப்பேன். நீ எங்கு இருந்தாலும் என்னை நினைத்தால் உன்னோடு இருப்பேன். பாபாவால் ஏற்றி வைக்கப்பெற்ற அக்னி குண்டத்திற்குத் துனி என்று பெயர். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. துனியைச் சுற்றிக் கம்பிகள் கொண்ட கதவுகள் உள்ளன. துனியின் புகை மேலே செல்லப்புகை போக்கி உள்ளது.
இந்தக் துனிக்காக பாபா விறகுக் கட்டைகள் வாக்கிப் போடுவார். துனியின் எதிரே பாபா தினம் அரை மணி நேரம் அமர்வார். பக்தர்கள் வீடு திரும்புகையில் துனியிலிருந்து பாபா விபூதி அளிப்பார்.
இந்த விபூதிக்கு உதி என்று பெயர். இது மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் பலருக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும், துயர்போக்குவதாகுவும் விளங்கியுள்ளது. இதை இன்று வரை இலவசமாகப் பெறமுடியும். உதியைச் சிறிதளவு வாயில் போட்டுக் கொள்ளலாம்.