Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியைத் தேடி தரும் ஸ்வஸ்திக்...!

Webdunia
வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும். விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து  கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக்.இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.
"ஸ்வஸ்திக்" என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள். வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும். இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா. வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள  தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது. 
 
ஸ்வஸ்திக் உணர்த்துவது:
 
நான்கு வேதமங்கள் - ரிக், யஜுர், சாம, அதர்வண 
நான்கு திசைகள் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு 
நான்கு யுகங்கள் - சத்ய, த்ரேதா, துலாபார, கலியுகம் 
நான்கு ஜாதிகள் - பிராமண, ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர 
நான்கு யோகங்கள் - ஞான, பக்தி, கர்ம, ராஜ 
நான்கு மூலங்கள் - ஆகாயம், வாயு, நீர், நிலம் 
வாழ்க்கையின் நான்கு பருவங்கள் - குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர், சந்நியாசி 
 
ஸ்வஸ்திக், ஓம், திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ, வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும். இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும். நன்மை தரக்கூடிய கோலங்களை பூஜையறையில் போட்டு பலன்  பெறவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | December 2024 Monthly Horoscope| Viruchigam | Scorpio

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | December 2024 Monthly Horoscope| Thulam | Libra

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | December 2024 Monthly Horoscope| Kanni | Virgo

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – சிம்மம்! | December 2024 Monthly Horoscope| Simham

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | December 2024 Monthly Horoscope| Kadagam

அடுத்த கட்டுரையில்
Show comments