Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்!

Advertiesment
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்!
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.  1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

 
* துருப்பிடித்து தேய்வதை விட, உழைத்து தேய்வது மேலானது. மன உறுதியோடு உழைத்து வாழுங்கள்.
 
* ஒருவரிடம் அன்பு இல்லாவிட்டால், அவரிடம் எவ்வளவு கல்வி ஞானம் இருந்தாலும் கடவுளை அடைய முடியாது.
 
* இறைவனுக்கு உருவமில்லாமல் இருக்கலாம். ஆனால் உருவ வழிபாடு கேலிக்குரியதல்ல.
 
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும்  மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
 
* நீ கடலை கடக்க விரும்பினால் இரும்பைப் போன்று மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச்  செல்வதற்கு போதுமான வலிமை உனக்கிருக்க வேண்டும்.
 
* மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்க வேண்டும் என்பது தெரிந்து கொண்டால் உலகம்  தனது ரகசியங்களை வெளியிடத்தயாராக இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்துபவனுக்கே வலிமை கிட்டும். உள்ளத்தின்  ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
 
- விவேகானந்தர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவராத்திரி விரத மகிமையை போற்றும் வேடனின் கதை....