Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்!

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்!
கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு  வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

 
* மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பணக்காரரோ, ஏழையோ யாராக இருந்தாலும் போதும் என்ற மனதை  இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.
 
* முதுமைக்கு தேவையானதை இளமையிலும், மறுபிறவிக்கு தேவையானதை இப்பிறவியிலும் தேட வேண்டும்.
 
* கண்ணிக்குத் தெரிந்த உயிர்களுக்கு தொண்டு செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.
 
* கல்வி, தானம், உடல்நலம் மூன்றிலும் தேர்ச்சி பெற இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் அவசியம்.
 
* நல்லவர்களின் உபதேசத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். சாதுக்களின் நல்ல வார்த்தைகள் காது வழியாக உண்ணும்  உணவு போன்றது.
 
* இறைவன் நமக்கு செய்யும் அத்தனை செயலும் அருள் தான். சில நேரத்தில் சோதனை குறிக்கிடும் போது, துன்பம் போல  தோன்றலாம். ஆனால், அதுவும் கூட அறியாமை தான்.
 
* பலர் சேர்ந்து முறையுடும் போது அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது போல, பலர் இணைந்து நடத்தும் கூட்டு  பிரார்த்தனைக்கும் உடனடியாக பலன் கிடைக்கும்.
 
* மனிதனுக்கு பெருமை சேர்ப்பது பட்டமோ, பதவியோ, பணமோ. அழகோ, குலமோ அல்ல. அறிவு ஒன்றே ஒருவருடைய  உயர்வுக்கு வழிவகுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்மிகத்தில் பின்பற்றப்படும் முன்னோர்களின் ஆரோக்கிய பழக்கங்கள்!