Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இராமலிங்க அடிகளாரின் சிந்தனை துளிகள்...!

இராமலிங்க அடிகளாரின் சிந்தனை துளிகள்...!
இராமலிங்க அடிகளார் எல்லா மதங்களிலும் உல்ல உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.
கடவுள் ஒருவரே. அவர் அருட்பொருஞ்சோதி ஆண்டவர். புலால் உணவு உண்ணக்கூடாது.
 
எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
 
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
 
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
 
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
 
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. மதவெறி கூடாது.
 
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
 
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
 
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
 
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே. குருவை வணக்கக் கூசி நிற்காதே.
 
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
 
இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாவராத்திரி வழிபாட்டில் அம்பாளின் 9 வடிவங்கள்...!