Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருபானந்த வாரியாரின் ஆன்மிக சிந்தனைகள்...

Webdunia
மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டு கிடக்கிறான். இதிலிருந்து விடுபட  முயற்சிக்க வேண்டும்.

 
* மூவாசைகளும் நம்மை மீண்டும் மீண்டும் பிறவிச்சுழலில் தள்ளிவிடுகின்றன. கரையேற நாம் தான் முயற்சியில்  இறங்கவேண்டும்.
 
* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம். அதுபோல தெய்வீக வாழ்வில் ஈடுபட நினைப்பவன்  ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
 
* எவன் புகழை விரும்பாமல் தன் பணியைச் செய்து வருகிறானோ அவனுடைய புகழை மூவுலகிற்கும் கடவுள்  தெரியப்படுத்துவார்.
 
* வயது தளர்ந்த காலத்தில் மனிதன் படும் துன்பத்தை எண்ணி இளைஞர்கள் தன்னைத் தானே திருத்திக் கொள்ள முயல  வேண்டும்.
 
* தியானம், பக்தி, தர்மத்தில் ஈடுபாடு, ஒழுக்கம் இவையெல்லாம் நம் மனதில் இருக்குமானால் இருக்கும் இடமே  புனிதமாகிவிடும்.
 
* பணம் ஒருவரிடம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.
 
- வாரியார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது!– இன்றைய ராசி பலன்கள்(28.12.2024)!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மேஷம்! | January 2025 Monthly Horoscope| Mesham | Aries Zodiac

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(27.12.2024)!

மகாபெரியவர் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி முக்தி தினம்: சிறப்பு ஆராதனைக்கு ஏற்பாடு

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! - 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments