அடர்ந்த வனப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலி்ற்கு மாலை நேரத்தில் சென்றால் அங்கு நிலவும் சூழலில் புறப்பட்டு வர மனமிருக்காது. எங்கு பார்த்தாலும் மயில்கள், பாறைகளுக்கு இடையே வளைந்து நெளிந்து ஓடி வரும் தாமிரபரணி ஆறு, இதமாய் வீசும் பொதிகை மலைக் காற்று என்று பூலோக சுவர்க்கமாகவே அவ்விடம் தெரியும். அமைவிடம் : திருநெல்வேலியில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் காரையார் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது. தங்குமிட வசதி : பொதிகை மலை அடிவாரத்திலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் தங்கலாம் அல்லது அம்பாசமுத்திரத்தில் தங்கிக்கொண்டு இத்தலத்திற்கு வரலாம். விசேட நாட்கள் : தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இத்திருக்கோயிலிற்கு 2 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இத்திருக்கோயிலிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாகவும் சொல்கின்றனர்.
பான தீர்த்தம் அருவிக்குச் சென்று நீராடிவிட்டு, மாலை சாயும் நேரத்தில் இத்திருக்கோயிலிற்கு சென்று வாருங்கள்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோ : கா. அய்யநாதன்