திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என அறுபடை முருகன் கோயில்களையும் சென்று முருகனை தரிசிக்க எல்லோராலும் முடியாதல்லவா....
அதனால்தான் சென்னையை அடுத்த பெசன்ட்நகரில் அறுபடை முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? அறுபடை முருகன் கோயில்களும் எவ்வாறு, எந்த திசையில், எப்படி அமையப்பட்டுள்ளதோ அதேப்போன்று தனித்தனி சன்னதிகளாக அறுபடை கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்குச் சென்று வந்தாலே அறுபடை முருகன் கோயில்களுக்கும் சென்று வந்த திருப்தி கிட்டும்.
பெசன்ட்நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல பெசன்ட்நகர் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.