இன்று முதல் நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பெண் தெய்வ வழிபாட்டின் உச்சமாக அமைந்துள்ள நிகழ்வு நவராத்திரி ஆகும். மகிஷாசூரனை துர்கா தேவி வதம் செய்ததை 9 நாட்களும் பெண்கள் பஜனை செய்தும், கொழு வைத்தும் கொண்டாடி துர்கா தேவியின் பூரண அருளை பெறுகின்றனர். இந்த ஆண்டிற்கான நவராத்தி இன்று முதல் தொடங்குகிறது.
இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாள் பூஜையில் என்ன நிற புடவை அணிய வேண்டும் அதன் காரணம் என்ன என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
-
முதல் நாள் - வெள்ளை நிற புடவை - தூய்மை, அமைதியை குறிக்கிறது
-
இரண்டாம் நாள் - சிவப்பு - வலிமை, பேரார்வத்தை குறிக்கிறது
-
மூன்றாம் நாள் - ராயல் நீலம் - செழிப்பை குறிக்கும்
-
நான்காம் நாள் - மஞ்சள் - மகிழ்ச்சியை குறிக்கிறது
-
ஐந்தாம் நாள் - பச்சை - வளர்ச்சி மற்றும் இயற்கையை குறிக்கிறது
-
ஆறாம் நாள் - சாம்பல் நிறம் - சமநிலையை குறிக்கும் நிலைத்தன்மை
-
ஏழாம் நாள் - ஆரஞ்சு - ஆற்றல் மற்றும் துடிப்பை குறிக்கும்
-
எட்டாம் நாள் - மயில் பச்சை - தனித்துவம் மற்றும் அழகை குறிக்கும்
-
ஒன்பதாம் நாள் - இளம் சிவப்பு நிறம் - அன்பு, பரிவை குறிக்கும்