கருப்பு கயிறு கட்டும் முறை காலம்காலமாக மக்களிடையே இருந்து வருகிறது. பொதுவாக திருஷ்டி படாமல் இருப்பதற்கும், கெட்ட சக்திகள் அண்டாமல் இருப்பதற்காகவும் மட்டுமே கருப்பு கயிறு கட்டப்படுவதாக நம்பப்படுகிறது.
ஆனால் இந்த காரணங்களை தாண்டி கருப்பு கயிறு சில பலன்களையும் நமக்கு தருகிறது. முதலில் கருப்பு கயிறை எப்படி கட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கருப்பு கயிற்றில் சிலவற்றில் நடுவில் முடிச்சு போடப்பட்டிருப்பதை காணலாம். இந்த முடிச்சு எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் மாறுபடும்.
முதலில் ஒரு கருப்பு கயிறை வாங்கி அனுமான், விநாயகர், முருகன் உள்ளிட்ட கடவுளர்களில் யாராவது ஒருவர் முன் வைத்து அவர்களுக்கு உரிய பாடல்கள், மந்திரங்களை கூறி ஒருநாள் பூஜித்து பின்னர் கட்ட வேண்டும். கோவில்களுக்கு கொண்டு சென்று அர்ச்சகரிடம் அளித்து கடவுளர் திருபாதத்தில் வைத்து ஆசீர் பெற்ற பின்னர் அணிவது கூடுதல் நன்மைகளை தரும்.
பொதுவாக கயிறு கட்டும்போது கையில் எத்தனை சுற்று சுற்றுகிறோம் என்பது பற்றி கவனிக்காமல் இஷ்டத்திற்கு சிலர் சுற்றி கட்டி விடுகிறார்கள். ஆனால் அவ்வாறு கட்டக் கூடாது. 3,5,7 ஆகிய ஒற்றைப்படை இலக்கங்களில்தான் கயிறை கையில் சுற்றி கட்ட வேண்டும். பெரும்பாலும் 3 மற்றும் 5 சுற்றுகள் சிறப்பு
அதுபோல கயிற்றின் நடுவே இருக்கும் முடிச்சுகள் 4,6,8 போன்ற இரட்டைப்படையில் வர வேண்டும். 2 முடிச்சுகள் திருஷ்டியை கழிக்கும், 4 துர்சக்திகளிடமிருந்து காக்கும், 8 முடிச்சுகள் செல்வம் பெருகும். அதற்கு மேல் முடிச்சுகள் இடக் கூடாது.
அதுபோல கயிறு கட்டும்போது அது கையில் அல்லது காலில் இருந்தாலும் சரி பெண்கள் இடது கை மற்றும் காலில்தான் கட்ட வேண்டும். அதுபோல ஆண்கள் வலது கை மற்றும் காலில்தான் கட்ட வேண்டும். மாற்றி கட்டுதல் கூடாது.