Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருங்காலி மாலை அணிவதால் செல்வம் பெருகுமா?

Advertiesment
Karungali Malai
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:40 IST)
ருத்ராட்ச மாலை, துளசி மாலை வரிசையில் மிகவும் நன்மையும், பூரண அருளும் நிறைந்த மாலைகளில் ஒன்று கருங்காலி மாலை.



நன்றாக வைரம் பாய்ந்த கருங்காலி மரத்தை வெட்டி அந்த துண்டுகளை சிறிய உருண்டைகளாக உருட்டி கருங்காலி மாலைகள் செய்யப்படுகின்றன. ஜாதக சாஸ்திரப்படி செவ்வாய் கிரகத்தின் நன்மையை நீக்கமற பெற கருங்காலி மாலைகளை அணியலாம்.

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்:

மேஷம், விருச்சிகம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் கருங்காலி மாலை அணிவது இஷ்ட தெய்வங்களின் பூரண அருளை தருகிறது.

அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் மாலை கருங்காலி மாலை. கருங்காலி மாலையை அணிந்தாலோ, வீட்டில் வைத்திருந்தாலோ குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

கருங்காலி மாலைகள் அணிவதால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

கருங்காலி மாலையில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக இதை அணிவதால் நோய்கள் எளிதில் அண்டாது என்றும் கூறப்படுகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் பெருகும் என பலரும் நம்புகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு நன்மை பயக்க கூடியவை.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(10-11-2023)!