Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்யாணபசுதீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்காக நீர் மோர் பந்தல்

கல்யாணபசுதீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்காக நீர் மோர் பந்தல்
, வெள்ளி, 15 மார்ச் 2019 (19:29 IST)
பங்குனி பெருந்திருவிழாவிற்கு அருள் மிகு கல்யாணபசுதீஸ்வரர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் சார்பில் நீர் மோர் பந்தல் இன்று துவங்கினர்.



செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் கணக்கு பிரிவு முதன்மை மேலாளர் முத்துகருப்பன் துவக்கி வைத்தார். பங்குனி பெருந்திருவிழா கடந்த சிலதினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்தி பங்குனி பெருந்திருவிழா தினங்களில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆயலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கரூர் திருச்சி தேசிய நெடுஞந்சாலையில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் சார்பில் நீர் மோர் பந்தல் இன்று துவங்கிப்பட்டது. உடலின் சூட்டை தணிக்கும் வகையில் பானகம், மோர், தண்ணீர் உள்ளிட்ட காலை முதல் மாலை வரை வழங்கப்பட்டு வருவோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் கணக்கு பிரிவு மேலாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கினர்.
 
சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (15-03-2019)!