Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Siva
திங்கள், 30 செப்டம்பர் 2024 (08:13 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை வரையும், அதேபோல் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை, பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments